உலகின் உயிர்ப்பெருந்திணிவுகள்

குறிப்பிட்ட வன விலங்குகளையும் விசேட தாவர வகைகளையும் கொண்ட இயற்கை தாவரங்களது கூட்டமே  உயிர்ப்பெருந்திணிவாகும்.


உயிர்க்கோளத்தின் ஒழுங்குமுறைக் கட்டமைப்புத் தொடரில் சூழற்தொகுதிகளுக்கு அடுத்தநிலையில் எடுத்து நோக்கப்படுவது உயிர்ப்பெருந்திணிவுகளாகும். உலகில் ஏராளமான சூழற்தொகுதிகள் காணப்படுவதுடன் அத்தகைய சமமான சூழற்தொகுதிகள் பல இணைந்து உயிர்ப்பெருந்திணிவுகளை உருவாக்குகின்றன. உயிர்ப்பெருந்திணிவுகளது பண்புகளை நோக்கும்போது அதன் வகைகளையும் அறிந்துகொள்ள முடியுமாக உள்ளது. இதன் அடிப்படையில் பெரிய நடுத்தர மற்றும் சிறிய அளவிலான உயிர்ப்பெருந்திணிவுகள் காணப்படுகின்றன.

பரந்த பிரதேசத்தில் பரம்பியுள்ள காடுகளை ஒரு உயிர்ப்பெருந்திணிவாக இனங்கண்டுக்கொள்ள முடியும். இதன் அடிப்படையில் உலகின் உயிர்ப்பெருந்திணிவுகளது பரம்பலை இனங்காண்பதற்கு 'காலநிலை'  ஒரு பிரதான காரணியாக அமைகின்றது. வெப்பநிலையும்மழைவீழ்ச்சியும் அடிப்படையாகக் கொண்ட காரணிகளின் செல்வாக்கால் மனித நடவடிக்கைகளைப் போன்றே இவற்றின் பண்புகளிலும் தாக்கம் செலுத்துகின்றன.


 உயிர்ப்பெருந்திணிவுகளது வகைகள்
1.    அயன மழைக்காடுகள்
2.    இடை வெப்பவலயக் காடுகள்
3.    மத்திய தரைக் காடுகள்
4.    புன்னிலங்களும் சவன்னாவும்
5.    தைக்கா (ஊசியிலை) காடுகள்
6.    பாலைவனத் தாவரங்கள்;
7.    துந்திரா



1.1)     அயன மழைக்காடுகள்
மத்திய கோட்டின் இருமருங்கிலும் காணப்படும் உயரமான செழிப்பான மரங்களைக் கொண்ட உயர்ப்பெருந்திணிவானது அயன மழைக்காடுகள் எனப்படும். அயன மழைக்காடுகளை செல்வாஸ்காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதேசங்களுக்கேற்ப அயன மழைக்காடுகள், அயனப் பருவக்காற்றுக் காடுகள் எனவும் பிரித்து நோக்கப்படுகின்றன.

1.2.1)    பரம்பல் :- அமேசன், சயர், மேற்கு ஆபிரிக்கா, மலேசியா, கம்போடியா, மியன்மார், லாவோஸ், தாய்லாந்து, வட வியட்னாம், வட அவுஸ்திரேலியா, நியுகினியா, மத்திய இந்தியா.

1.2.2)    காலநிலை:- 2500 மி.மீ - 5000 மி.மீ வருட மiவீழ்ச்சி கிடைப்பதுடன் வருடம் முழுவதும் மழை வீழ்ச்சிக் கிடைக்கும். சாரீரப்பதனானது 75 – 90 சதவீதத்திற்கு இடையில் உயர்வாக காணப்படும். வெப்பநிலையானது வருடம் முழுவதும் 27 – 30 பாகை செல்சியஸ் வரையில்; காணப்படும்.

1.2.3)    தாவரங்களின் பண்புகள்:- அயன மழைக்காட்டுத் தாவரங்களின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.
•    அதிகமாகக் காணப்படும் உயிர்ப்பல்லினத்தன்மை
•    என்றும் பசுமையான தாவரங்கள்
•    ஏராளமான தாவரங்கள் நெருக்கமாகவும் உயரமாகவும் வளர்தல்.
•    அதிகமான கீழ்நில வளரிகள்
•    பல தட்டுக்களிலான தாவரங்கள்
•    பூக்கும், காய்க்கும் தாவரங்கள்
•    தண்டில் பூக்கும், காய்க்கும் மரங்கள்
•    சூரிய ஒளி உட்புக முடியாமையினால் கீழ்நிலப்பகுதி அதிக ஈரலிப்பாகக் காணப்படல்.
•    மேலொட்டித் தாவரங்கள்
•    ஏறு தாவரங்கள்
•    பல படைகளைக் கொண்டிருத்தல்
                வெளிப்படை   - 35m - 45m உயரமான மரங்கள் காணப்படல்.
                விதானப்படை   - 25m - 30m உயரமான மரங்கள் காணப்படல்.
                உபவிதானப்படை   - 10m - 15m உயர மரங்கள்
                பற்றைத்தாவரப்படை  - 5m - உயர மரம்
1.2.4)    பிரதான தாவரங்கள்:-  மகோனி, கருங்காலி, நாக, தாளமரம், தேக்கு, சந்தனம், அகேஷியா, யுகலிப்டஸ், மூங்கில், மேலொட்டித் தாவரங்கள்.

1.2.5)    விலங்குகள்:- குரங்குவகைகள், ஊர்வன, விச ஜந்துக்கள்.




1.2)     இடைவெப்ப வலயக் காடுகள்
இடைவெப்ப வலயப்பிரதேசத்திற்குள் பரம்பிக் காணப்படும் காடுகள் இடைவெப்ப வலயக் காடுகள் எனப்படுகின்றன.  இடைவெப்ப வலயக் காடுகள் காலநிலை மற்றும் தாவரங்களின் அடிப்படையில் இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
•    இடைவெப்ப வலய என்றும் பசுமையான காடுகள்
•    இடைவெப்ப வலய இலையுதிர் காடுகள்


1.2.1)    பரம்பல் :- அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கலிபோர்னியா, தென் சீனா, வடநியூசிலாந்து.

1.2.2)    காலநிலை:- மழைவீழ்ச்சியானது  150 மி.மீ - 750 மி.மீ. இற்கும் இடைப்பட்டதாகவிருப்பதுடன் வருடம் முழுதுமான மழைவீழ்ச்சி கிடைத்தல். வெப்பநிலை குறைவாக உள்ளதுடன் வருடம் முழுதும்  ஒரே அளவில் இருப்பதில்லை. வருடம் முழுதும் வெப்பநிலை மாறுபட்டுக் காணப்படுவதுடன் பனிப்பருவத்தில் வெப்பநிலை அதிகமாகும்.

1.2.3)    தாவரங்களின் பண்புகள்:- இடைவெப்ப வலயத் தாரங்களின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
•    அயன காடுகள் போன்று பல்வகைமைத் தன்மையற்றவை, தாவர அடர்த்தி குறைவு.
•    என்றும் பசுமையான, தாவரங்களும் இலையுதிர்க்கும் தாவரங்களும் உள்ளன.
•    உயரமற்ற தாவரங்கள், கீழ் வளரிகள் குறைவாகும். உயரமான தாவரங்களும் பற்றை மரங்களும், பாசிகளும் காணப்படுகின்றன.

1.2.4)    பிரதான தாவரங்கள்:-  ஓக், மெக்னோலியா, யுகலிப்டஸ், பைன் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.

1.2.5)    விலங்குகள்:- மான் வகைகள், பறவையினங்கள், நீர் வாழ் உயிர்கள்



1.3)    மத்திய தரைக்காடுகள்
மத்திய தரைக்கடலினைச் சுற்றியுள்ள கரையொர நாடுகளிலும், அதே காலநிலைமையைக் கொண்ட வேறு சில பிரதேசங்களிலும் காணப்படும் தாவரங்கள் மத்திய தரைக்காடுகள் எனப்படுகின்றன.

1.3.1)    பரம்பல் :- ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு பிரதேசங்கள் தாழ்நிலங்கள், கேப்டவுன், கலிபோனியா, மத்திய சிலி, தென் மேற்கு, தென் அவுஸ்திரேலிய கடற்கரையோரப் பிரதேசங்கள்.

1.3.2)    காலநிலை:- மழைவீழச்சியானது குளிர்ப்பருவத்தில் 750 மில்லிமீற்றர் வரையில் காணப்படுகின்றது.  அதிக பனி பருவம், கடுங் குளிர்காலப் பகுதியும் காணப்படுகின்றன. வெப்பநிலையானது 26.6- 32.2 பா.செ. வரையில் காணப்படுகின்றது. குளிர்க்காலங்களில் 12.2 - 10 பா.செ. வெப்பநிலையும் காணப்படுகின்றது.

1.3.3)    தாவரங்களின் பண்புகள்:- மத்திய தரைக் காடுகளின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
•    என்றும் பசுமையான தாவரங்கள் இருப்பதுடன் வரட்சிக் காலத்துக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய தாவரங்;களாகவும் உள்ளன.
•    ஆவியுயிர்ப்பினை குறைப்பதற்கு சிறிய இலைகள், மெழுகினால் மூடப்பட்ட இலைகள் கொண்ட தாவரங்கள்.
•    தாவரங்கள் முடிச்சுகளைக் கொண்ட கொப்புக்களையுடையதாயும், தடித்த பட்டைகளையும் கொண்டிருக்கும்.
•    நீரை உறிஞ்சக்கூடிய வகையில் நீண்ட முட்களைக் கொண்டுள்ளன.

1.3.4)    பிரதான தாவரங்கள் :- பைன், சீடர், ஓக்,ரோஸ்மர், லவென்டர், டியுலிப், யுகலிப்டஸ், தேவதாரு போன்ற தாவரங்கள் உள்ளன.

1.3.5)    விலங்குகள்:- அலங்காரப் பறவைகள், மான்கள் முதலிய விலங்குகள் காணப்படுதல்.


1.4)    புல்நிலங்கள்
தாவரங்களில் காடுகளைப் போலல்லாது சிறிய வகையான புல்தாவரங்களைக் கொண்ட பகுதிகள் புல்நிலங்கள் எனப்படுகின்றன.

1.4.1)    பரம்பல் :- கென்யா, சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக், தன்சானியா, அங்கோலா, சயர், மத்தியஆபிரிக்கா, நைஜீரியா, கினியா, நைகர், பிரேசிலின் கம்போஸ், வெனிசுவேலா, கொலம்பியாவின் லானோஸ், ரஷ்யாவின் ஸ்டெப்ஸ், ஆஜன்டீனாவின் பம்பாஸ், அவுஸ்திரேலியாவின் டவுன்ஸ்.

1.4.2)    காலநிலை:- மழைவீழ்ச்சியானது 1000 – 1500 மில்லிமீற்றர் வரையில் காணப்படுதல். குளிர்மாதத்தில் 18பா.செ. இற்கு அதிகமான வெப்பநிலை காணப்டல். உயர்வான ஆவியாக்கம் மற்றும்  நீண்ட கோடைகாலமும் குறுங்கால மாரிக்காலமும் காணப்படுவதுடன் இங்கு வேகமான காற்றுக்கள் வீசுவதனையும் அவதானிக்கலாம்.


1.3.6)    தாவரங்களின் பண்புகள்:- புல்நிலங்களின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
•    அதிகளவில் சிறிய அளவிலான புல் வகைகள்.
•    காடுகளின் அருகே உயர்வான மரங்களும் பாலைவனங்களுக்கு அருகில் சிறிய புற்களும் காணப்படுகின்றன.
•    இடைக்கிடையில் மரங்களும் பற்றைச்;செடிகளும் காணப்படுகின்றன.
•    பல்வேறு இலைகளைக் கொண்ட தாவரங்கள்.
•    பல்வேறு வடிவமைப்பு கொண்ட இலைகள் கொண்ட தாவரங்கள்.
•    புல்வகைகள், அகேஷியா, பயோபெப் போன்ற மரங்களும் உள்ளன.

1.4.3)    விலங்குகள்:- காட்டெருமை வகை மாடுகள், சிறுத்தை, புலி, ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை என்பன வாழ்கின்றன.




1.5)     ஊhசியிலைக் காடுகள் (தைக்கா காடுகள்)
உலகின் மிகப்பெரிய உயிர்ப்பெருத்pணிவாக ஊசியிலைக் காடுகள் காணப்படுகின்றன. ஊசியிலைக் காடுகளை தைக்கா காடுகள் எனவும் அழைக்கின்றனர். தைக்கா என்ன்ற ரஸ்ய மொழிச்சொல்லின் அர்த்தம் காடகள் என்பதாகும்.

1.5.1)    பரம்பல் :- வட அமெரிக்காவின் மேற்கு கரையோரத்தில் இருந்து கிழக்கு கரையோரம் வரையிலானபகுதி, வட ஐரோப்பாவின் மேற்குக் கரையோரத்திலிருந்து கிழக்கு ஆசியாவின் கரை வரை உள்ள நீண்டு ஒடுங்கிய பரப்பில் பரம்பியுள்ளது. மேற்கு ஐரோப்பாவின் 600 வட அகலக்கோடு வரையாக தெற்காகவும் கிழக்கு ஆசியாவில் 500 வட அகலக்கோடு வரை தெற்காகவும் கிழக்கு கிழக்கு அமெரிக்காவில் தெற்காகவும் 450 வட அகலக்கோடு வரை தெற்காகவும் பரப்பியுள்ளது.

1.5.2)    காலநிலை:- வருடம் முழுவதும் பரவலான மழைவீழ்ச்சி கிடைக்கக் கூடிய தன்மை காணப்படுகின்றது.  நீண்ட குளிர் குறைவான கோடை பருவமும் காணப்படுகின்றது. குறைவான வெப்பநிலை காணப்படுவதுடன் கோடைக் காலங்களில் 20பா.செ. வெப்பநிலையும் குளிர்காலத்தில் 6 பா.செ. வெப்பநிலையும் காணப்படுகின்றது.

1.5.3)    தாவரங்களின் பண்புகள்:- ஊசியிலைக் காட்டுத் தாவரங்களின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
•    தடிப்பான முற்களுடன் கூடிய இலைகள் கொண்ட தாவரங்கள்.
•    நிமிர்ந்த தாவரங்கள் ஆனால் மென்மையான மரங்கள்.
•    என்றும் பசுமையான தாவரங்கள் உள்ளன.

1.5.4)    பிரதான தாவரங்கள்:- பைன், ஸ்பூஸ், லார்ச், பர், பர்ச், சைப்பிரஸ், சீடர், பொப்லர் போன்ற தாவரங்கள்.



1.6)    பாலைவனங்கள்
உலகில் வரண்ட நிலையில் காணப்படும் பாலைவனப் பகுதிகளின் தாவரங்களை பாலைவன உயிர்ப்பெருந்திணிவு குறிக்கின்றது.

1.6.1)    பரம்பல்:- ஐக்கிய அமெரிக்காவின் கலிபோனியா, அரிசோனா, அமெரிக்காவின் அடகாமா, ஆபிரிக்காவின் சஹாரா, கலஹாரி, நமீபியா, அராபியப்பகுதி, தார், மேற்கு அவுஸ்திரேலியா கோபி, ஐக்கிய அமெரிக்க நவேடா, துர்கிஸ்தான்.

1.6.2)    காலநிலை:- மழைவீழ்ச்சியானது வருடத்திற்கு 250 மி.மீ. ஐ பார்க்கிலும் குறைவாக உள்ளதுடன், சிலபகுதிகளில் மழைவீழ்ச்சி கிடைப்பது என்பதே அரிதாகும். உயர்வான வெப்பநிலை காணப்படுகின்றது. குறிப்பாக 45 பா.செ. வரையில் கூட அதிகரித்துக் காணப்படும்.

1.6.3)    தாவரங்களின் பண்புகள்:- ஊசியிலைக் காட்டுத் தாவரங்களின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
•    பெரிய தாவரங்களைக் காணமுடியாது, பாசி போன்ற சிறிய தாவரங்களை காணலாம். உதாரணம்: கோமாரிகா
•    சதைப்பிடிப்பான தண்டு கொண்ட தாவரங்கள்
•    சிறிய அளவிலான இலைகள்.
•    தாவர இலைகள் மெழுகினால் மூடப்பட்டுள்ளன.
•    சாற்றுத் தன்மையுள்ள தாவரங்கள்.
•    நீண்ட வேர்களைக்; கொண்ட தாவரங்கள்.
•    தாவரங்கள், முற்செடிகள் போன்றன உள்ளன.

1.6.4)    விலங்குகள்:- ஒட்டகம், கங்காரு, மான், ஓநாய், ஓணான் போன்ற விலங்குகள் உள்ளன.

1.6.5)    குளிர்ப்பாலைவனங்கள்: - 254mm க்கும் குறைவான பனிக்கலப்பு காணப்படும் பாலை வனங்கள் குளிர்ப் பாலைவனங்களாகும்.  கோபி, இடாகோ (Idako) Nevoda அல்லது eagon ருவாயா,  அட்டகாமா,ஈரான், நமீப், தக்லமகான், துருக்கி போன்றன குளிர்பாலைவனங்களாகும். குறிப்பிடத்தக்க தாவரப்பரம்பல் இங்கு காணப்படவில்லை. Lizards, Gazzelle எனும் முயல் வகை Gerbil எனும் எலி வகை காணப்படுகின்றன.


1.7)    துந்திரா
உலகில் முனைவுப் பகுதியில் உள்ள பனிப்பகுதி தாவர உயிர்ப்பெருந்திணிவுகள் துந்திரா உயிர்ப்பெருந்திணிவு எனப்படுகின்றது.
1.7.1)    பரம்பல்:- முனைவுப் பகுதிகள் (வட ஆட்டிக்) மற்றும் உயர்வான மலைப்பகுதிகள் (எவரெஸ்ட்) போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

1.7.2)    காலநிலை:- வருடாந்த மழைவீழ்ச்சியாக  50 அஅ - 300 அஅ வரையில் காணப்படுதல். வருடத்தில் 2 - 4 மாதங்கள் வரையிலான குறுகிய கால சூரிய ஒளி  கிடைப்பதுடன் உயர்வான பனிப்பொழிவு நிகழ்தல்.

1.7.3)    தாவரங்களின் பண்புகள்:- ஊசியிலைக் காட்டுத் தாவரங்களின் பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
•    பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் அதிக தாவரப் பரம்பல் காணப்படுவதில்லை.

1.7.4)    விலங்குகள்:-  பென்குயின், பனிமான், துருவக்கரடி, லெமிங் போன்றன காணப்படுகின்றன.

மேற்கண்ட உயிர்ப்பெருந்திணிவுகளுக்குப் புறம்பாக உலகின் அதிகமான பகுதிகளில் காணப்படும் மற்றொரு உயிர்ப்பெருந்திணிவாக ஈரநிலங்களைக் கூறலாம். அமெரிக்காவின் பென்டனல், அமேசன் வடிநிலம், சுண்டர்பான் என்பன உதாரணங்களாகும். உலகின் சகல காலநிலைப் பகுதிகளிலும் ஈரநிலங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கரையோர ஈரநிலங்களும் காணப்படுகின்றன.


(Notes :- Teacher Guide A/L Geography)